சென்னை: சென்னை  புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்,  200 கிலோ குட்கா, ரொக்கம், கார் உள்பட கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சா, பான்மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் தயாரிப்பை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிஜிபி உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  சென்னை புறநகர் பகுதியில் காவல்துறையினர்  நடத்திய அதிரடி சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 67 லட்சம் ரூபாய் பணம் சிக்கியதோடு போதைபொருள் கடத்தல் மன்னனும் சிக்கியுள்ளார்.

சென்னையை அடுத்த மலையம்பாக்கம் வெளிவட்ட சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து சோதனை செய்தனர். அதில், ஏராளமான போதைப்பொருட்கள்  ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு  கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த காரில் இருந்த 2 பேரை கைது செய்ததுடன்,   காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எபான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில், போதைப்பொருட்களை கடந்த வந்தவர்கள்,  மணிமங்கலம் பகுதியை சேர்ந்த நரேந்திரன், ஹரிகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம், இருந்து,  200 குட்கா, 65 ஆயிரம் ரூபாய் பணம், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும்  புழல் சிறையில் அடைத்தனர்.