மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில்  குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளயின ஷரிக்குக்கு கோவையில் சிம்கார்டு வாங்கி கொடுத்து உதவிய  சுரேந்தர் சுமார் 60மணி நேர விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பின்போது, அந்த ஆட்டோவில்  பயணம் செய்த முகமது ஷாரிக் (24) மற்றும் டிரைவர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த முகமது ஷாரிக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில், அவர்  பயன்படுத்திய சிம்கார்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிம்கார்டு, அவர் கோவையில் வாங்கியது  தெரிய வந்தது. அவரது பெயர் இல்லாமல், ஊட்டியை சேர்ந்த சுரேந்திரன் (28) என்பவரின் பெயரில் அந்த சிம்கார்டு பெறப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறையினர் சுரேந்திரனிடம் தொடர் விசாரணை நடத்தினர். அவரது ஊட்டி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இருந்தாலும் அவரை கர்நாடக அழைத்துச் சென்று அம்மாநில போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோவை லாட்ஜில் தங்கியிருந்தபோது, பக்கத்து அறையில் இருந்த ஷாரிக் கெஞ்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது ஆதார் கார்டை வைத்து சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். வேறு எதுவும் தனக்கு தெரியாது என கூறினார். சுரேந்திரன்  கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு பாயிற்சியாளராக இருந்ததும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர்மீது எந்தவொரு புகாரும் இல்லை. இருந்தாலும், சுரேந்திரன் செல்போனில் முகமது ஷாரிக் யார் யாரிடம் பேசினார்? என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து சுமார் 40 மணி நேர விசாரணைக்கு பறிகு  சுரேந்தர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  இருந்தாலும், மீண்டும், விசாரணைக்கு ஆ4ராக வேண்டும் என சம்மன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: ஷரீக் தங்கியிருந்த கோவை லாட்ஜில் தனிப்படை ரெய்டு… பரபரப்பு தகவல்கள்…