மதுரை: கிறிஸ்தவ பள்ளியின் மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இறந்த மாணவியன் உடலை பெற்றுக்கொள்ள, பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள  சாக்ரேட் ஹார்ட் என்ற கிறிஸ்தவ பள்ளியில், விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த  மாணவி லாவண்யா கடந்த விரம்  விஷம் குடித்து தற்கொலை செய்தார். இவரை மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வீடியோ வெளியிட்டிருந்தார். இதுதாடர்பாக அவருடைய பெற்றோரும் காவல்நிலையத்தில்  புகார் அளித்திருந்தனர். ஆனால், காவல்துறை எஸ்பியோ உண்மைக்கு மாறாக, மதமாற்றம் செய்ய வலியுறுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

அரியலூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம்

இதுதொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஊர் மக்கள், பாஜக உள்பட சில அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில், நேற்று புகார்  மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோரிடம் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வைத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன்  விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த மாணவியின் சித்தி சரண்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எனது மகளை மதமாற்றம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால் அவள் மனதுக்குள் காயப்பட்டு வந்துள்ளார். மேலும் விடுதியில் கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லியும், பாத்திரங்கள் கழுவ சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். தொடர்ந்து மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் அவள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவளை மதமாற்றம் செய்ய வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்.

மதம் மாற கட்டாயப்படுத்தியதால் என் மகள் தற்கொலை! அரியலூர் மாணவியின் தந்தை பரபரப்பு புகார்…

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கே இந்த நிலை என்றால் மற்ற மாணவிகள் நிலை என்னவாகும். எங்கள் மகளின் சாவுக்கு நியாயம் வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையில் மாணவியின் தற்கொலை விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன், மாணவி பாலியல் தொல்லையால் இறக்கவில்லை என்பதால், மறுஉடற்கூறாய்வு செய்யத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

கிறிஸ்தவ மதத்துக்கு மாற தனியார் பள்ளி வார்டன் வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை! வீடியோ…