‘பீட்சா 3-தி மம்மி’ பட டீசர் வெளியீடு…!

Must read

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா திரைப்படம் குறைந்த பொருட்செலவில் மிக திரில்லிங்கான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.

தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படமும் வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது பீட்சா 3 தி மம்மி திரைப்படம் வெளியாகிறது.

பீட்சா 3 தி மம்மி திரைப்படத்தில் நடிகர் அஸ்வின் & நடிகை பவித்ரா மாரிமுத்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் கௌரவ் நாராயணன், அபிஷேக், காளி வெங்கட், அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கத்தில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் அருண்ராஜ் இசையமைத்திருக்கும் பீட்சா 3 தி மம்மி படத்தையும் தயாரிப்பாளர் CV.குமார் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இன்று பீட்சா 3 தி மம்மி படத்தின் டீசர் வெளியானது.

More articles

Latest article