பிரபல நடிகை மேக்னா ராஜும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரி மகனும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவும் 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார் சிரஞ்சீவி.

அப்பொழுது கர்ப்பமாக இருந்த மேக்னா 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் மேக்னா. சிரஞ்சீவியின் பிறந்தநாளான இன்று தன் கம்பேக் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

புதுமுகம் விஷாலின் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் மேக்னா. அந்த படத்தை மேக்னாவும், சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பன்னகா பரணாவும் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.