நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 7  மீனவர்கள் கடல் கொள்ளையர்களால்  தாக்கப்பட்டுள்ளனர்.

நேற்று விசைப்படகு மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுதுறையில் இருந்து 7 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.  நடுக்கடலில் நாகை மாவட்ட  மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் கம்பி கட்டையால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும் கொள்ளையர்கள் மீனவர்களிடம் இருந்த திசைகாட்டு கருவி, செல்போன் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடல் கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்த 2 மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட கடல் கொள்ளையர்கள் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இப்பகுதி மீனவர்களிடையே இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்க் கூறப்படுகிறது.