‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் தற்போது இயக்கி வரும் “பெட்ரோமாக்ஸ்” ஹாரர் மூவியில் நடித்து வருகிறார் தமன்னா.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் தமன்னாவுடன் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

ரோஹின் வெங்கடேஷன் இயக்கியிருக்கும் இப்படம் திகில் படமாக இருந்தாலும், இதுவரை இல்லாத ஒரு காமெடிப் படமாக இருக்கும், என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

இப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகிறது.