இயக்குநரும், தயாரிப்பாளருமான பாபு கணேஷ், ’ஆர்ட்டிக்கள் 370’ யை மையமாக வைத்து படம் ஒன்றை தயாரித்து இயக்குகிறார். அதில் அவர் மகன் ரிஷிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

’370’ படத்தின் மூலம் 40 நாட்கள் நடத்த வேண்டிய படப்பிடிப்பை 4 கேமராக்களைக் கொண்டு 2 நாட்களில் நடத்தி புதிய சாதனை படைக்க உள்ளார் பாபு கணேஷ் .

பாபு கணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் பாபு கணேஷ் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு ஜாக்குவார் தங்கம் மற்றும் குழுவினர் இதுவரை தமிழ் திரைப்படங்களில் இடம்பெறாத பல அதிரடி ஆக்‌ஷன்களை அமைக்க உள்ளார்களாம்.