நடிப்பை அடுத்து இசையில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன் . வெளிநாட்டை சேர்ந்த நடிகர் மைக்கேல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன் திடீரென்று காதலரை பிரிந்துவிட்டார்.

காதல் தோல்வி குறித்து இதுவரை பேசாமல் இருந்த ஸ்ருதி ஹாசன், தற்போது தனது காதல் குறித்து சில ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

நல்லவர்கள் கூட சில நேரங்களில் தவறு செய்கிறார்கள். அப்படி தான் எனது காதலிலும் நடந்தது. இருந்தாலும் எனக்காக ஒருவருக்காக காத்திருக்கிறேன். அவரை விரைவில் உங்களுக்கு அறிமுகப்படுத்துவேன், என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு விஸ்கி loverஆக இருந்தேன். ஆனால் தற்போது அனைத்தையும் நிறுத்திவிட்டேன். எனக்கு உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது.சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது சரியாக முயற்சித்து வருகிறேன் அன்று கூறியுள்ளார் .