விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 3-யின் டைடில் வின்னராக முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார்.

மலேசிய நாட்டைச் சேர்ந்த இவர், அங்கு பிரபல ஆல்பம் பாடகராக வலம் வருபவர் .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரை சக போட்டியாளரான அபிராமி காதலித்தார். ஆனால், அவரது காதலை நிராகரித்த முகேன், தனக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகவும், அவர் மலேசியாவில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முகேன், தற்போது தனது காதலி நதியாவுடன் வலம் வர தொடங்கியுள்ளார். நதியா. நடிப்பு மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர் .