வெள்ளங்கோவில்

தம்மிடம் நகைகளை திருடியோருக்கு செய்வினை  வைக்கப்போவதாகப் பேனர் மூலம் நகை உரிமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளங்கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இந்த ஊரைச் சேர்ந்த\ ராமசாமி கடந்த 15-ம் தேதி அன்று குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அவர் தனது வீட்டினை பூட்டி சாவியை வெளியிலேயே ஒரு இடத்தில் மறைவாக வைத்துச் சென்றுள்ளார்.

இதை நோட்டமிட்ட சில ராமசாமி சென்றதும் வீட்டினுள் புகுந்து வீட்டினுள் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாயையும் திருடிச் சென்றுள்ளனர்.  ராமசாமி. திரும்பி வந்து நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக காவல்துறையிடம் புகாரளித்தும் இதுவரை நகைகள் கிடைக்கவில்லை.

எனவே ராமசாமி வினோத முயற்சியில் இறங்கினார். அவர் தனது தெருவின் முக்கில் ஒரு பேனரை வைத்துள்ளார்.

பேனரில்,

”கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமசாமி வீட்டில் நகைகள் திருடுபோய் உள்ளது.  வெள்ளங்கோவிலை சேர்ந்த எவரும் நகைகளை எடுத்திருந்தால் திருப்பி வைத்து விடுங்கள், இல்லை என்றால் கோவிலில் கோழி குத்தி செய்வினை வைக்கப்படும். இதனால் எடுத்தவர்கள் குடும்பமே பாதிக்கப்படும். எனவே நகைகளை வைத்து விடுங்கள் ,” 

என்று எழுதப்பட்டுள்ளது.

இது அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.