ன்னியாகுமரி

ன்னியாகுமரியில் ஞாயிறு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்ட் தலமான கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கமாகும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. கேரளா மற்றும் வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன் காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் கடலோர பாதுகாப்பு குழுமக் காவலர்கள், சுற்றுலா காவலர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.