சென்னை

ன்று சென்னையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.

கடந்த 18 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காவல்துறையினர் 23-ந் தேதி மற்றும் 24-ந் தேதி இந்த சிலைகள் கரைப்புக்கு அனுமதி வழங்கினர்.

சென்னை நகரில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த 4 கடற்கரைகளிலும் தீயணைப்பு வாகனங்கள்,2 ராட்சத கிரேன்கள், ஒரு சிறிய கிரேன் வாகனங்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரைப் பகுதிகளில் ரப்பர் படகுகள், முதலுதவி சிகிச்சை பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படை மூலம் கடற்கரை பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ession