சென்னை

நாளை சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நாடாளுமன்ற பணிகள், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து, அடுத்தக்கட்ட முடிவெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குழுவினர் நேற்று டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி பியூஷ்கோயல் ஆகியோரை சந்தித்துள்ளனர்.  அப்போது அவர்கள் அண்ணாமலை விவகாரம் பற்றிப் பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.