டில்லி:

பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் சிலைகளை உடைக்க தூண்டி வருவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்ககும்  ராகுல் காந்தி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

‘திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டபோது, அதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பா.ஜ.க அரசும் வேடிக்கை பார்த்தார்கள். அவர்களின் கட்சிக்கு எதிரானவர்களின் சிலைகளை உடைக்க பா.ஜ.க-வே வழிவகுத்துத் தருகிறது.  அதன் விளைவாகவே,  தலித்துகளுக்காக போராடிய பெரும் சமூக சீர்திருத்தவாதியான  பெரியாரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்ற கிராமத்தில் இருக்கும் பெரியாரின் சிலை, மர்ம நபர்களால் நேற்றிரவு உடைக்கப்பட்டதை குறிப்பிட்டு, அந்த படத்துடன்  ராகுல்காந்தி டுவிட் செய்துள்ளார்.