சென்னை:

றைந்த கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பரோலி வரும் சசிகலாவுக்கு சிறைத்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

நள்ளிரவு 1.30 மணி அளவில் உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் இயற்கை எய்தினார். அதைத்தொடர்ந்த அவரது உடல் பாதுமக்கள் பார்வைக்காக சென்னையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது மறைந்த கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள 15 நாட்கள் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு சிறைத்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், இன்று மதியம் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா கார் மூலம் விளார் நோக்கி விரைந்துள்ளார்.

இந்நிலையில், சசிகலாவுக்கு சிறைத்துறை பல்வேறு நிபந்தனைகளின் பேரிலேயே பரோல் வழங்கியதாக கூறப்படுகிறது.

அதன்படி,

சசிகலா தஞ்சாவூரைத் தவிர வேறு எங்கும் , எந்த காரணத்திற்காகவும் செல்லக் கூடாது

அரசியல் சார்ந்த கூட்டங்களில் அல்லது சந்திப்புகளில் கலந்து கொள்ளக் கூடாது ;

அரசியல்வாதிகளை அரசியல் ரீதியாக சந்திக்க கூடாது.

எந்த ஒரு ஊடகத்துக்கும் பேட்டி அளிக்க கூடாது 

பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது

இன்று முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை பரோல் வழங்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 4-ம் தேதி காலை பரப்பன சிறைக்கு அவர் மீண்டும் செல்ல வேண்டும்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது 5 நாட்கள் பரோலில் சசிகலா வந்தபோதும் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், தற்போது 2வது முறையாக சசிகலா பரோலில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.