பிக் பாஸ் பாவனியின் முன்னாள் காதலர் ஓபன் டாக்….!

Must read

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

முதல் ஆளாக சமூக வலைதளங்களில் ஆர்மியை பெற்றார் பாவனி ரெட்டி.

அவர் தனது கணவரின் தற்கொலை , அதோடு கணவர் இறந்த பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது என அனைத்தும் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் பகிர்ந்து கொண்டார்,

இதையடுத்து ரசிகர்கள் சிலர் பாவனிக்கு இரண்டாவது திருமணம் நடைப்பெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இது வெறும் வதந்தி என்றும், அவர் இரண்டாவதாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மை தான், ஆனால் அது திருமணத்தில் கைகூடவில்லை என்றும் பாவனியின் சகோதரி விளக்கமளித்தார்.

இந்நிலையில் பாவனியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த தயாரிப்பாளரும், நடிகருமான ஆனந்த் ஜாய் இன்ஸ்டாகிராமில் “ராணி… எனக்கு தட்டச்சு செய்ய எந்த கடிதமும் இல்லை.. தயவுசெய்து அவளுக்கு ஆதரவளிக்கவும். அவள் வாழ்க்கையில் நிறைய அனுபவித்திருக்கிறாள். அவள் என் சிறந்த தோழி மட்டுமல்ல. அதற்கும் மேல்… துர்கா எனும் பாவனி ரெட்டி என்றென்றும். உலகின் மிக அழகான நபர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article