பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே திடீரென வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. 2-வது வாரத்தின் முதல் நாளே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் தேர்வுக்கான போட்டி மற்றும் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தாமரைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார். நாமினேஷன் ப்ராசஸ்-ல் தாமரைச்செல்வி மற்றும் பாவனியை தவிர மற்ற அனைத்து ஹவுஸ் மேட்களும் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள்.

முதல் ப்ரோமோ : ‘ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க்கில் தனது கதையை சொல்கிறார் நிரூப். அப்போது, “நான் பிக் பாஸுக்கு வர்றேன்னு சொன்னதும், எல்லாரும் யாஷிகாவோட முன்னாள் காதலர்ன்னு சொன்னாங்க. உண்மையிலேயே அவளோட முன்னாள் காதலனா இருக்குறத நினைச்சு பெருமைப்படுறேன். அவ தான் என் வாழ்க்கையை மாத்துனா என கூறுகிறார்.

இரண்டாவது ப்ரோமோ : நதியா சங் தனது கதை குறித்து பேசுகிறார். அதில், ‘அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, எனக்கு அம்மா மேல என்னிக்கு ரொம்ப வெறுப்பு வந்துச்சுனா, போலீஸ்காரங்க கிட்ட அடி வாங்க வச்சாங்க. என் லைஃப் முழுக்க வேலை வேலைனு இருந்திருக்கேன். நான் என்னோட டீன் ஏஜ் வயதை அனுபவிச்சதில்லை, காலேஜ் லைஃப் அனுபவிச்சதில்லை. ஆனால் எனக்கு மனுஷங்க கொடுக்காத ரெகக்னிஷன ஒரு ஆப் கொடுத்திச்சு’ என நதியா சங் பேசியுள்ளார்.

மூன்றாவது ப்ரோமோ : ராஜு, இமான், மதுமிதா, ஐக்கி, சிபி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து வெளியில் பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது ராஜு மற்றும் இமான், மதுமிதாவுக்கு பாடல் கற்று கொடுக்கின்றனர். சிவகார்த்திகேயனின் “கட்டிக்கிடும் முன்னே நம்ம” பாடலை ராஜு பாட அதனை கேட்டு மதுமிதா பாடுகிறார்.