சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘தர்மதுரை’.

2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதனை ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். “விரைவில் ‘தர்மதுரை 2’ அப்டேட்” என்று தெரிவித்துள்ளார்.