சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். “விஸ்வாசம்” படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று, தலைவா படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அபிமன்யூ சிங், அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.

சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டீசரை ஆயுத பூஜையை முன்னிட்டு, அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணாத்தயின் தெலுங்கு திரையரங்கு உரிமையை கடும் போட்டிக்கு நடுவில் ஏசியன் சினிமாஸ் வாங்கியுள்ளது. மிகப்பெரிய தொகை படத்துக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏசியன் சினிமாஸின் நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு இருவரும் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர்கள். தீபாவளிக்கு தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர்.