டில்லி

ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டதால் ரத்தான பயண டிக்கட் பணம் இன்னும் திரும்ப அளிக்கப்படாமல் உள்ளது.

கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சேவைகளை ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது. ஆனால் இந்த முடிவு அறிவிப்புக்கு முன்னரே பல பயணிகள் தங்கள் பயணச் சீட்டுக்களை முன்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக விமான சேவை நிறுவனங்கள் தங்கள் சேவையை ரத்து செய்யும் போது வசூலிக்கப்பட்ட பயணக் கட்டண தொகையை திரும்ப அளிப்பது வழக்கமாகும்.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு இதுவரை பயணக்கட்டணம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திரும்ப அளிக்கப்படாமல் உள்ளது.

உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் சபினா கோம்ப்ஸ் என்பவர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 4 பயணச்சீட்டுக்கள் சிங்கப்பூர் சென்றுவர முன்பதிவு செய்திருந்தார். அவர் மே மாதம் 10 ஆம் தேதி அன்று பயணம் செய்ய முன் பதிவு செய்திருந்த நிலையில் ஏப்ரல் 17 முதல் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதை ஒட்டி சபினா தனது பயணச்சீட்டை ரத்து செய்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  மூலம் பயணம் செய்துள்ளார். ரத்து செய்யப்பட்ட பயணசீட்டுக்கான கட்டணம் ரூ.82400 கடந்த ஏப்ரல் மாதம் 24 அன்று அவருக்கு திரும்ப அளிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்தது. ஆனல் இன்று வரை அந்த பணம் திரும்ப அளிக்கபடவில்லை. இவருக்கு இந்த பணம் வராதது மட்டுமின்றி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் பயணம் செய்ததில் ரூ.1 லட்சம் பயணக் கட்டணமும் செலுத்தி உள்ளார்.

இவரைப் போல் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் பணத்தை திரும்ப பெற காத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களில் யாருக்கும் பணம் எப்போது அளிக்கப்படும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் ஆகி விட்டதாக மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அப்படி திவால் ஆகி விட்டதாக நிறுவன தீர்ப்பாயம் அறிவிக்கபட்டால் இந்த பயணிகளும் கடனாளிகள் பட்டியலில் சேர்க்கபட வாய்ப்புண்டு.  திவால் சட்டப்படி நிறுவனத்தின் சொத்துக்களை விற்று அவற்றை கடன் அளித்த வரிஅகளூக்கு பங்கிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போதுள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் பயணிகளுக்கு திருப்பி தர வேண்டிய பயணக் கட்டணத்தை உடனடியாக.அளிப்பது ஒன்றே முக்கியமாகும். ஆனால் நிறுவனத்துக்கு தற்போது உள்ள நிதி நெருக்கடியில் இந்த பணத்தை திரும்ப அளிக்கும் அளவுக்கு வசதிகள் இருககது என கூறப்படுகிறது.