தராபாத்

க்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.  அப்போது ராகுல் காந்தி நின்றபடியே அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

மேலும் ராகுல் காந்தி தனது பயணத்தின் போது பெண்களுக்கான இலவச பேருந்து பயண வசதி குறித்து கேட்டறிந்தார்.  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறினார்.