சென்னை:  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 29ம் தேதி திமுக எம்.பி.-க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக,   திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-1-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடை பெறும். அதுபோது, தி.மு.க. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் ஒன்றிய அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் நிலையில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.  அதே சமயம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்  இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதிக் கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் 31ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது.  இந்த சூழலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுவது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

குடியரசு தலைவர் முர்முவின் உரையுடன் ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது மத்திய பட்ஜெட்! பாராளுமன்ற செயலர் அறிவிப்பு…