ஸ்லாமாபாத்

ம்மால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் பறந்து பயணம் செய்ய ஒரு பாகிஸ்தானியர் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் முகமது பயஸ். இவர் வெகுநாட்களாக விமானப் படை விமானியாக ஆசைப்பட்டவர் ஆவார். தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே விமானம் ஓட்ட ஆசை கொண்டிருந்த அவர் ஏழ்மை காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்த நேரிட்டது. ஆயினும் அவருக்கு விமானி ஆக வேண்டும் என்னும் ஆசை மனதில் இருந்து நீங்கவில்லை.

எனவே அவர் தாமே சொந்தமாக ஒரு விமானத்தை தயாரிக்கமுடிவு செய்தார். எனவே அவர் ரூ.90000 செலவில் சொந்தமாக ஒரு விமானம் அமைத்தார். இதற்கு தேவையான பணத்துக்காக தன்னிடம் இருந்த நிலத்தை விற்றார். அத்துடன் தனது சொந்த சேமிப்பு, வங்கிக்கடன் ஆகியவற்றின் மூலம் இந்த விமானத்தை தயாரித்தார். அத்துடன் பணத்துக்காக பகலில் பாப் கார்ன் விற்ற அவர் இரவில் காவல்காரராக பணி புரிந்தார்.

யாருடைய உதவியும் இன்றி பயஸ் தானாகவே தனது வீட்டில்தனது விமானத்தை கடந்தஒரு வருடம் முன்பு தயாரிக்க தொடங்கினார். தனது ஐந்தாம் வகுபில் இருந்தே காற்று அழுத்தம், விமானம் பறக்கும் முறைகள் பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தார். அது மட்டுமின்றி பல தொலைக்காட்சிகளில் விமான விபத்து குறித்த ஆய்வு நிகழ்ச்சிகளைக் கண்டு விபத்துக்களை தவிர்ப்பது குறித்தும் தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.

இவர் தாம் தயாரித்த விமானம் மூலம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வானில் பறக்க அனுமதி அளிக்குமாறு உள்ளூர் காவல் நிலையத்துக்கு விண்ணப்பம் செய்தார். ஏற்கனவே அவர் அனுமதி இன்றி பறக்கும் சோதனை நடத்தி உள்ளார். ஆயினும் முறையாக அனுமதி தேவை என பலரும் கூறியதால் இந்த அனுமதி விண்ணப்பம் அளித்த்தார்.

காவல்துறை பயஸுக்கு அனுமதி மறுத்து விடது. அதை ஒட்டி அவர் தற்போது பாகிஸ்தான் சிவில் விமானத் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அனைத்து துறைகளிலும் புதிய முயற்சி ஊக்குவிக்கப்படும் என் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

அவருடைய முயற்சியை பாராட்டிய சிவில் விமானத்துறை அவருக்கு இது குறித்து தேவையான தொழில்நுட்ப உதவிகள் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.