ஐதராபாத்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக ஓவைஸி கட்சி போட்டியிட இருப்பதாக அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவரான அசாதுதின் ஓவைசி,  அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் என்ற கட்சியின்  தலைவராக இருந்து வருகிறார். நாடு முழுவதும் உள்ள  முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதத்தின் பக்கம் சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.  இதனால், அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.  இதையடுத்து  பல மாநிலங்களில் இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி வருகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற  பீகாகார் சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் சமதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து  14 தொகுதிகளில் போட்டியிட்டு 5ல் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அதுபோல நடைபெற உள்ள மேற்குவங்க சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  தமிழக சட்டமன்ற தேர்தலிலும ஓவைசியின் கட்சி போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து  அசாதுதீன் ஓவைஸி  செய்தியாளர்களிடம் கூறும்போது,  ஏஐஎம்ஐஎம் கட்சி குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சில பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானிலும்  ஐஎம்ஐஎம் கட்சியை பலப்படுத்தப்படும். அதுபோல,   தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் எங்களது கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

ஓவைசி கட்சி ஏற்கனவே 20  முதல்  தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும,  கூட்டணியில் இணைந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும்   அக்கட்சியின் தமிழக தலைவர் வகீல் அமகது தெரிவித்துள்ளார். அதன்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடி,  ஆம்பூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, நெல்லையில் உள்ள சில தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

மிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள்  அதிமுக, திமுக கட்சிகளை சார்ந்தே தேர்தலை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில், ஓவைசியின் கட்சியும் தேர்தலில் இறங்கினால், இஸ்லாமிய சமூகத்தினர் வாக்குகள் பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.