பெங்களூரு:
ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக பாரதிய ஜனதா கட்சியினரும், பல்வேறு இந்து அமைப்பினரும் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.

ராமர் கோவில் கட்ட நடந்து வரும் நிதி வசூல் குறித்து அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது என்றும், இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கி உள்ளனர் என்றும் இது மக்களின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.