டெல்லி: காஷ்மீரில் மீண்டும் கருப்பு பனி (உறை பனி) பெய்யும்போது பாஜகவில் சேருகிறேன் என பிரதமர் மோடியின் அழைப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ஓய்வுபெற்ற ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான   குலாம்நபி ஆசாத்  பதில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் மாநிலங்களைவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் 9ந்தேதியுடன் முடிவடைந்தது. சுமார் நான்கு தசாப்தங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள குலாம் நபி ஆசாத்துக்கு  ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில், பேசிய பிரதமர் மோடி, குலாம்நபி ஆசாத்தை வெகுவாக புகழ்ந்ததுடன், அவர் தனது நெடுஙகால நண்பர் மற்றும் நாட்டின்மீது அக்கறை கொண்டவர், கர்வமில்லாதவர் என்றதுடன், குலாம்நபி ஆசாத் போன்றவர்கள் மீண்டும் இந்த சபைக்கு தேவை, அவரை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்யாவிட்டால், பாஜக தேர்வு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் நன்றி தெரிவித்து  பதிலுரை ஆற்றிய ஆசாத்,  “இந்தியாவில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஒழிக்கப்படவேண்டும். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் குறித்து கேள்விப்படும் போது, நான் இந்திய முஸ்லீம் என்பதனை நினைத்து பெருமை கொள்வேன்” என்றார்.

இந்த நிலையில், ஆசாத்துக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பு சலசலப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள், குலாம்நபி ஆசாத் பாஜகவில் சேரலாம் என்று ஊகங்களை வெளியிட்டு வந்தன. அதுபோல, ஒரு ‘இந்துஸ்தானி முஸ்லீம்’ மற்றும் ‘குழு 23’  போன்றவைகளும் இதுகுறித்து விமர்சித்திருந்தன.

இந்த நிலையில், தான் ஒருபோதும் பாஜகவில் இணைய மாட்டேன் என்று தெரிவித்துள்ளதுடன், காஷ்மீரில் மீண்டும் கருப்பு பனி (உறை பனி) பெய்யும் வகையில் காலம் மாறட்டம், அப்போது  பாஜகவில் சேருகிறேன் என பதில் தெரிவித்துள்ளார் குலாம் நபி ஆசாத்.

பிரதமர் மோடியை தனக்கு  90 களில் இருந்து தெரியும், இருவரும் பொதுச்செயலாளர்களாக இருந்தோம், நாங்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிக்கும் தொலைக்காட்சி விவாதங்களில் வருவோம்; விவாதங்களிலும் சண்டையிட்டோம். ஆனால், வெளியே வந்ததும், நாங்கள் இருவரும்,  நாங்கள் ஒரு கப் டீயையும் சிட்-அரட்டையையும் பகிர்ந்து கொள்வோம்.

பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் முதலமைச்சர்களாக அறிந்தோம், அதைத் தொடர்ந்துரு, பிரதமரின் கூட்டங்களில், உள்துறை அமைச்சரின் கூட்டங்களில் சந்தித்தோம். பின்னர் அவர் முதல்வராக இருந்தார், நான் சுகாதார அமைச்சராக இருந்தேன், ஒவ்வொரு 10-15 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு பிரச்சினைகளில் பேசுவோம். பின்னர், கடந்த 2006 இல், [காஷ்மீரில்] ஒரு குஜராத்தி சுற்றுலா பஸ் தாக்கப்பட்டது, அதுதொடர்பாக, அவருடன் பேசும் போது நான் கண்ணீர் விட்டேன் என்று கூறினார்.

ஆனால், எங்களின் நட்பு  ஜம்மு-காஷ்மீரின் பிரச்சினைகளை பாதிக்காது என்று நினைக்கிறேன். பாஜக அரசு மீது, 370 வது பிரிவு பற்றி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களும் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். பாஜகவின் முக்கிய  நிகழ்ச்சி நிரலாக இல்லாத யூனியன் பிரதேசத்திற்கு, மாநிலத்தைப் பிரித்துள்ளது, அந்தஸ்தை ரத்து செய்துள்ளது,  அனைவரையும் காயப்படுத்தியுள்ளது; இந்த நடவடிக்கையால் நாங்கள் சாம்பலாகிவிட்டோம்.

யூனியன் பிரதேசங்களை  மாநிலங்களாக மேம்படுத்துவதை மட்டுமே நான் கண்டேன், நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான மாநிலங்களில் ஒன்றான எனது சொந்த மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது, அதை ஒருபோதும்  ஜீரணிக்க முடியாது. எந்த அடிப்படையில், அவ்வாறு செய்யப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு அதன் பின்னணி தெரியாது.

ஆனால், பிரதமரின் ராஜ்யசபா உரையானது,  பிரதமர் அதை செயற்கையாக செய்கிறார் என்று நிறைய பேர் நினைத்தார்கள், ஏனென்றால் ஒரு காங்கிரஸ்காரர் விடை பெறுகிறார் என்றால்,  அவர் ஏன் கவலைப்பட வேண்டும். நான் சொன்னது போல், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எனக்கானவை, ஆனால் எங்கள் உணர்ச்சி வேறு சூழலில் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

நான் பாஜகவில் சேரப்போவதாக யூகங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் வேறு எந்த கட்சியிலும் சேரமாட்டேன் , இதைச் சொல்பவர்கள் அல்லது இந்த வதந்திகளைப் பரப்புவோர், அவர்கள் எனக்குத் தெரியாது என்றவர், வதந்திகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, காஷ்மீரில் கறுப்பு பனி பெய்யும்போது நான் பாஜகவில் சேருவேன் என்றார்.