துரை

முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தமக்கு இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அழைப்பு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்ட மோதலால் இரு அணிகளும் தனித்து இயங்கி வருகின்றன.  இதில் எடப்பாடி அணிக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் பன்னீர்செல்வம் அணி கட்சி தங்களுக்கே சொந்தம் எனக் கூறி வருகிறது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம்,-

”கர்நாடகா தமிழகத்துக்கு காவிரி நீர் தரமுடியாது எனக்  கூறுவது சட்டவிரோதம்.  தமிழக அரசு சட்டப்படியோ, பேச்சுவார்த்தை மூலமோ காவிரி நீரைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு துரிதமாகச் செயல்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும். 

மக்களவைத் தேர்தலுக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை.  நான் சசிகலாவை இதுவரை சந்திக்கவில்லை என்றாலும் விரைவில் சசிகலாவைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது. எங்கள் புரட்சி பயணம் மீண்டும் தொடரும்” 

என்று கூறி உள்ளார்.