டெல்லி: அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீமின்றத்தில்  தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து, அங்கிருந்த எடப்பாடி தரப்பினரை தாக்கி, தனது அதரவாளர்களுடன்  ஆவணங்களை  ஓபிஎஸ் அள்ளிச்சென்றார். அதன்பிறகு, அதிமுக அலுவலகத்துக்கு காவல்துறை சீல் வைத்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கையை விமர்சித்ததுடன் அலுவலக சாவியை ஓபிஎஸ் தரப்பிடம் கொடுக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்படவல்லை. இதையடுத்து,   இபிஎஸ் தரப்பிடம் சாவியை ஒப்படைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து,  வழக்கை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் விசாரிக்க முயற்சி செய்வதாக தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார். இதனால் விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.