சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை. ஆனால், அவரது நண்பர் அன்பில் மகேஷ்-க்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

14 முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அமைச்சரவையிலும் வாய்ப்பு…

34 பேர் கொண்ட திமுக அமைச்சரவை பட்டியலில் 14 பேர் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளார்கள். அத்துடன் புதுமுகங்கள் 15 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

முதல்முறை அமைச்சராக பொறுப்பு ஏற்பவர்கள் விவரம்…

1 சக்கரபாணி – கொங்கு வேளாளர்
2 காந்தி – நாயுடு
3 மா.சுப்பிரமணியன் -மீனவர்
4 மூர்த்தி – முக்குலத்தோர்
5 சிவசங்கர் – வன்னியர்
6 சேகர்பாபு – நாயுடு
7 பழனிவேல் தியாகராஜன் – பிள்ளை
8 நாசர் – முஸ்லீம்
9 செஞ்சி மஸ்தான் – முஸ்லீம்
10 அன்பில் மகேஷ் – முக்குலத்தோர்
11 மெய்யநாதன் – முத்தரையர்
12 கனேஷன் – ஆதிதிராவிடர் BR
13 மனோ தங்கராஜ் நாடார் கிறிஸ்துவர்
14 மதிவேந்தன் – ஆதிதிராவிடர் -அருந்ததியர்
15 கயல்விழி ஆதிதிராவிடர் அருந்ததியர்

இவர்கள் மட்டுமின்றி, அதிமுக ஆட்சியின், அமைச்சர்களாக பணியாற்றி, பின்னர் திமுகவில் இணைந்து, தற்போது வெற்றிபெற்றுள்ள 3 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.

1) முத்துசாமி

2) ராஜகண்ணப்பன்

3) அனிதா ராதாகிருஷ்ணன்

4) செந்தில் பாலாஜி