சென்னை: தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில்,  நாளை மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா  நிறைவேற்றப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் நேற்று (21ந்தேதி) திமுக எம்.பி.யின் கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ஆலைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அரசின் விளக்கங்களையும் பேரவையில் விளக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில், ஒரே மசோதா இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிக்கிறது. ஆதனால், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டின் ஆன்லைன் தடை மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர், சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அதன்படி, இத்தகைய மசோதா, மத்திய அரசு வரம்பில் வருவதால்,  அதை மாநில அரசு நிறைவேற்ற முடியாது என்றும்,  இந்த மசோதாவா, ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பாக,  உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் வழங்கியுள்ள உத்தரவுகளுக்கு முரணாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடை   மசோதாவில் இடம்பெற்றுள்ள  சில அம்சங்கள், பிற விஷயங்களும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் சந்தேகங்களை போக்கி, நாளை மீண்டும்  சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டார். அதற்கு  அவர் ஒப்புகை வழங்குவதை தவிர வேறு வழியில்லை.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநிலஅரசுக்கு அதிகாரம் உண்டு! மத்தியஅரசு தகவல்…