சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. அதிமுகவின் “நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே” என வாதங்களை முன் வைத்து வந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கி, பொதுச் செயலாளர் தேர்தலில் என்னை போட்டியிட அனுமதித்தால் வழக்கை வாபஸ் பெற தயார் என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து விட்ட நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறி, ஓபிஎஸ் தரப்பில்,  மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் காரணமாக விடுமுறை தினமாக இன்று  விசாரணை  வந்தது. இன்றைய வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.

தங்களுக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் இல்லாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது, நியாயமற்றது என்று கூறியதுடன்,  பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த நிலையில் அந்த பதவிக்கு போட்டியிட விதிகள் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அதிமுகவில், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.

தற்போதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி நீடித்து வருகிறது. அந்த பதவிக்கு  2026 காலம் உள்ளது. தங்களதுக்கு  எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது. “ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை”

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும்.  விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும்; அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

அதனால், எடப்பாடி தரப்பினர் தங்களை,  தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. ஜூலை 11-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எடப்பாடி தரப்பின் நோக்கம், அதிமுகவை உருவாக்கிய  எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது. அவருக்கு பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளார்.   அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 1977 முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. அதனால்,  பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். திமுகவுடன் நெருக்கம் காட்டியதாக எளிமையான காரணம் கூறி நீக்கியுள்ளனர். ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி. உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல. கட்சியில் எந்த விதிகள் திருத்தப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்த அனைத்தையும் செய்து விட முடியாது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. பிற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதற்காகவே என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என எம்ஜிஆர். விதிகளை வகுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிடத் தயார்; வழக்கையும் வாபஸ் பெறத் தயார்.. இவ்வாறு ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதிமுகவின் “நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே” என வாதங்களை முன் வைத்து வந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கி, பொதுச் செயலாளர் தேர்தலில் என்னை போட்டியிட அனுமதித்தால் வழக்கை வாபஸ் பெற தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  கட்ச உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்பதற்கு,  அவை சங்கங்களோ, கிளப்களோ அல்ல, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிவடைந்தபிறகு, இபிஎஸ் தரப்பு வாதங்கள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்தே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்கு மேலும் கால அவகாசம் ஆகலாம் என கூறப்படுகிறது.