ஈரோடு: பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி உள்ள   ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.

பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த போது  சிவகுமார்,  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 11 பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு ரூ.6.85 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் அவர்மது ஏராளமான முறைகேடுகள் தொடர்பான புகார்கள் ஊள்ளன. பின்னர் பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் மாற்றப்பட்டார். அதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையாக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அவரது வீட்டில் நேற்று  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக,   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போதும், அவர்மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. எதிர்க்கட்சியினரின் புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஓப்பனாகவே குற்றம் சாட்டினர்.

இநத் நிலையில்,  அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணைகளைத் தொடர்ந்து, சிவக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.