ஒருதலை கொலைகள் ஏன்? தடுப்பது எப்படி?: மனோதத்துவ மருத்துவர் சுப்பிரமணியன் விளக்குகிறார்

Must read

தான் காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவேண்டும். இல்லாவிட்டால் கொலைதான் என்கிற எண்ணம் பரவலாகிவருகிறோ என தோன்றுகிறது.
ஒரு சில வருடம் முன்பு காரைக்கால் வினோதினி, சமீபத்தில் விழுப்புரம் நவீனா. இப்போது தூத்துக்குடி ஃபேஷினா,  கரூர் சோனாலி என பட்டியல் நீள்கிறது.

தூத்துக்குடி ஃபேஷினா
தூத்துக்குடி ஃபேஷினா

காதல் மனநிலை கொலைகார மனநிலையக்கு மாற காரணம் என்ன…  விளக்குகிறார் மனோதத்துவ மருத்துவர் சுப்ரமணியன்:
“ஆண் பெண் ஈர்ப்பு என்பது இயற்கையான உணர்வு. அதில் காதலும் ஒரு மென்மையான உணர்வு. ஆனால்  நமது சமுதாயம் ஆணாதிக்க சமுதாயமாக இருக்கிறது. பெண் என்பவளை, ஒரு மனுஷியாக, உயிரும், உணர்வும் கொண்டவளாக பெரும்பாலான ஆண்கள் நினைப்பதில்லை.  உணர்வற்ற பண்டமாகவே பெண்களை நினைக்கிறார்கள். இதற்குக் காரணம் நமது ஆணாதிக்க சமுதாய மனோபாவம்தான்.
அடுத்து ஈகோ.
“நான் காதலிக்கிறேன். அவள் ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே” என்கிற எண்ணமே பெரும்பாலான ஆண்களிடம் இருக்கிறது. அந்த பெண் மறுத்தால், ஒட்டுமொத்தமாக தனக்கே அவமானம் நேர்ந்துவிடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள். அதை அவர்களால் தாங்க முடிவதில்லை. அது அந்த பெண்ணைப் பற்றி அவதூறு பேசுவதில் ஆரம்பித்து கொலை செய்வது வரை போகிறது.
அடுத்து பிரேமை. ஒரு பெண்ணின் இயல்பான பார்வை, பேச்சைக்கூட தன்னை காதலிப்பதாக எடுத்துக்கொள்ளும் ஆண்களின் போக்கு. இதனால் தங்கள் மனதிற்குள் கற்பனையை வளர்ததுக்கொள்கிறார்கள். அந்த பிரமை உடையும் போது வெறிகொண்டவர்கள் ஆகிறார்கள். அதாவது மனப்பிறழ்வு.
கரூர் சோனாலி -
கரூர் சோனாலி –

இந்த கொடூரங்ளை தடுக்க, முதல் முயற்சியை நமது வீட்டில் இருந்து துவங்க வேண்டும். குழந்தைகளுக்கிடையே சண்டை வந்தால், “ஆண்  பிள்ளை முரட்டுத்தனமாகத்தான் இருப்பான், பெண் பிள்ளைதான் பொறுத்துப்போக வேண்டும்” என்பதான அறிவுரைகள், படிக்காத பாமரர்கள் இல்லத்தில் மட்டுமல்ல மெத்தப்படித்தவர்கள் குடும்பங்களிலும் கேட்க நேர்கிறது.
இந்த நிலையை முதலில் மாற்ற வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதை பெண் குழந்தைகள் மனதில் மட்டுமல்ல..குறிப்பாக ஆண் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.
இதை உணரத்தும்படியான பாலியல் கல்வி பள்ளி கல்லூரிகளில் வேண்டும். பாலியல் கல்வி என்பது உடலுறவு குறித்துச் சொல்வதல்ல. ஆண் பெண் உடல் ரீதியாக எப்படிப்பட்டவர்கள், வளரும் பருவத்தில் அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்கிற புரிதலை ஏற்படுத்துவதே. அது அவசியம்.
"காதலிக்கலேன்னா கொன்னுடுவேன்" :"சேது" சொல்லித்தந்த பாடம்
“காதலிக்கலேன்னா கொன்னுடுவேன்” :”சேது” சொல்லித்தந்த பாடம்

அடுத்து சினிமா. ஒரு ஆண் நினைத்தவுடன் பெண் ஓ.கே. சொல்லிவிடுகிறாள். அல்லது அவளைத் துரத்தித் துரத்தி மிரட்டி காதலிக்கிறான். அவளும் உடன்படுகிறாள். இதுபோன்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள் இளைஞர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பிறகு.. மது.
குரங்கு கள்ளும் குடித்தால் என்ன ஆவது என்பார்கள். குரங்கு போன்ற மன நிலையில் உள்ளவர்கள் மதுவும் குடித்தால் என்ன ஆகும். வக்கிர சிந்தனையை செலாக்கிவிடுகிறார்கள். மதுவிலக்கு அல்லது மதுக்கட்டுப்பாடு அவசியம்.
ஆகவே இது போன்ற கொலைகள் தடுக்கப்பட வேண்டுமானால்,  ஆண் பெண் சமத்துவம் வீட்டில் துவங்கப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில்ஆண் பெண் பாலியல் சமத்துவ வகுப்புகள் வேண்டும். மது விற்பனை தடை அல்லது முறைப்படுத்தப்பட வேண்டும்” என்று சொல்லி முடித்தார் மனோத்தத்துவ மருத்துவர்  சுப்ரமணியன்.

More articles

Latest article