20 ரூபாய் லஞ்சம் வாங்கிய  காவல்துறை அதிகாரி! வீடியோ!

 

ரவுண்ட்ஸ் பாய்:

aa

இது, சென்னை போரூர் மணப்பாக்கம் பகுதியில் நடந்த சம்பவம்.

இதை வீடியோ எடுத்து நமக்கு அனுப்பிய நண்பர் சொன்னது:

“மணப்பாக்கம் பகுதியைக் கடந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தினார் இந்த காவல்துறை அதிகாரி.  ஆர்.சி., லைசென்ஸ், இன்சூரன்ஸ் புக் இருக்கா என்று கேட்டார்.

இல்லாதவர்கள்தானே பெரும்பாலும்?

அவர்களிடம், “கோர்ட்டுக்கு போனா ஆயிரம் ரூபா ஃபைன் கட்டணும். பி்ன்னாலேயே ரெக்கவரி வண்டி வருதி. சீக்கிரம் ஆளுக்கு ஐநூறு ரூபா கொடுத்துட்டு போங்க..”  என்றார் அதட்டலாக.

Untitled

“அவ்வளவு இல்லீங்க..” என்று தலையை சொறிந்தபடியே ஒருவர் இரு நூறு ரூபாயை நீட்ட.. வாங்கிக்கொண்டார் அந்த காவல் அதிகாரி.  இன்னொருவர், தலையை கூடுதலாய் சொறிந்துகொண்டு, “நூறுதான் சார் இருக்கு..” என்று நீட்ட.. லேசான முறைப்புடன் வாங்கிக்கொண்டார். ( அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இது.)

கடைசியாக ஒருவர் மட்டும் தனது வண்டியோடு, பயந்தபடி நின்றுகொண்டிருந்தார். அவரிடம் காவல் அதிகாரி, “நீ சரிவர மாட்டே.. கோர்ட்ல போயி பணம் கட்டிக்க” என்றார்.

சரி, ஒருவரை மட்டும் கணக்கு காண்பிப்பதற்காக கோர்ட்டுக்கு இழுக்கிறார் போலும் என்று நினைத்தேன்.

அதன் பிறகு நடந்தது வேடிக்கை..

பயந்தபடி நின்ற அந்த இருசக்கரவாசி, . “சார்.. தப்பா நினைக்காதீங்க.. இருபது ரூபாதான் இருக்கு” என்று நீட்ட..

ஆத்திரத்தில் முறைத்த அதிகாரி, “சரி, கொடு” என்று அதை வாங்கி  (பிடுங்கி) பையில் போட்டுக்கொண்டார்!” என்று  சொன்னார் நமக்கு இந்த வீடியோவை அனுப்பிய நண்பர்.

மேலும் அவர், “ஹூம்… இருபது ரூபாய் வாங்கற அளவுக்கு போகணுமா” என்றார் ஆதங்கத்துடன்.

அதற்கு நான் சொன்னேன்:

“போலீஸ்காரங்கன்னா கெடுபிடியா இருப்பாங்கன்னு யார் சொன்னது.. நம்ம சூழலை புரிஞ்சி அனுசரிச்சு நடந்துக்கிறாங்க…  நண்பேன்டா!”

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bribery, officer, Police, rupees, Twenty, அதிகாரி, இருபது, சிறப்பு செய்திகள், போலீஸ், ரவுண்ட்ஸ்பாய், ரூபாய், லஞ்சம்
-=-