தற்போதைய செய்திகள்!

Must read

 • தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(செப்., 1) வெளியிடப்படுகிறது.
 • இன்று முதல்  வார்டு, மண்டல அலுவலகங்களில் வரைவு வாக்களார் பட்டியல் வைக்கப்படும். 39லட்சத்து 87 ஆயிரத்தை 359 பேர் மொத்த வாக்காளர்கள்.
 • பொதுமக்கள் ஆவணங்களை தாங்களே தயாரித்து அனுப்பலாம்: பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய மென்பொருள் மூலம் ஆவணங்கள் பதிவு ஜெயலலிதா அறிவிப்பு
 •  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று துவங்கி, செப்., 30 வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று(செப்., 1) துவங்குகிறது. வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, செப்., 30 வரை, விண்ணப்பம் அளிக்கலாம்.
 • செப்., 11 மற்றும், 25ல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மனுக்கள் பெற, சிறப்பு முகாம் நடத்தப்படும்.
 • வரைவு வாக்காளர் பட்டியலை, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
 • thவாக்காளர்
 • கடற்கரை சாலையில் முதல்வர் பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீஸ் மீது பைக் மோதல் –  படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
 •  உடல் நிலை குறைவு காரனமாக SRM ரவி பச்சமுத்து காவல் நிலையதில் ஆஜரகவில்லை அவரது வழக்கறிஞ்சர் தகவல்
 • நாட்டில் யாரை அனுமதிப்பது என்று முடிவெடுக்க அமெரிக்கர்களுக்கு உரிமையுண்டு: டிரம்ப்-அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஃபீனிக்ஸ் நகரில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் குறித்தான தனது கொள்கையை எடுத்தரைத்தார்.
 •  பிரேசில் முன்னாள் அதிபர் தில்மா ருசெஃப் பதவி நீக்கப்பட்டதற்கு பின்பு, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட மிஷல் டெம்மர், தற்போது பிரேசில் ஒரு புதிய நம்பிக்கை சகாப்தத்தில் பிரவேசித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 •  தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழலில், குர்பானி என அழைக்கப்படும் ஒட்டகத்தை பலியிட தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 •  ராயபுரம் அண்ணா பூங்காவில் சில நாட்களாக ஒரு இளைஞர் கூட்டம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த கூட்டத்தின் மீது சந்தேக கண் கொண்டு பார்க்கின்றனர் பூங்காவிற்கு வருபவர்கள். அவர்கள் யார், என்ன விதமான கலையை பயிற்சி செய்கிறார்கள். இளைஞர்களுக்கு மூளை சலவை செய்கின்றனரா என பல்வேறு வகையில் சிந்திக்கின்றனர். காவல்துறை விசாரிக்குமா.
 •  பிரேசில் செனட்டில், தில்மா ருசெஃப் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விசாரணையின் முடிவில், அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க அதிகப்படியான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
 •  இந்தியாவில் முதலீடுகளைக் கவரும் முயற்சியில், 18 மாதங்களில் பொருளாதாரத்தில் 1.5 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு இந்தியாவில் குடியிருப்பு அந்தஸ்து வழங்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 •  இந்தியாவின் கங்கை நதியில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பருவமழை வெள்ளம், கடந்த காலங்களின் வெள்ளப் பதிவுகளை விட அதிகளவில் பதிவாகியுள்ளது
 •  ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கு முதல் முறையாக ஒரு பழங்குடி பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 •  ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக்கரை பகுதியில், 285 புதிய யூத குடியிருப்புகள் கட்ட இஸ்ரேல் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கெனவே உள்ள 175 குடியிருப்புகளை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
 • இலங்கையில் தமிழ் மொழிமூல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை-இலங்கையில் மத்திய கல்வி அமைச்சினால் புதிதாக வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனம் தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் வி. இராதா கிருஷ்ணன் கவலை வெளியிட்டுள்ளார்.
 • யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஐந்தரை கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
 • சென்னை: மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இன்று ஆலோசனை நடத்துகிறது. தாது மணல் கொள்ளை, மின்சாரம் கொள்முதல், ஊழல் போன்ற புகார்களால் முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன், அகில் ஆனந்த் ஆகியோர் 2 தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் 6 உயரதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு முன்னாள் மூத்த அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூத்த அதிகாரிகள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை, ஐஏஎஸ் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று காலை தலைமை செயலாளர் ராமமோகன்ராவிடம் அவர்கள் முறையிட்டனர். உயரதிகாரிகள் மீதான சஸ்பெண்டுக்கு காரணம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகியோர் சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இன்று கூடு ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 • நிலச்சரிவு காரணமாக ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை தடுத்து நிறுத்தம்
 •  குர்கானில் மீண்டும் மழை: பாதுகாப்பாக பயணிக்க குர்கான் போலீஸ் அறிவிப்பு
 •   மதுராந்தகம் வடக்கு புறவழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நின்று கொண்டிருந்த லாரி மீது மினி சரக்கு வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 •   ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இலங்கை சிறைப்பிடித்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 •  மத்திய பிரதேசம் மாநிலம், தாமோ மாவட்டத்தில் மழைக் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால்  மக்கள் ஒரு தற்காலிக பாலம் அமைத்து அதன் வழியாக கால்வாயை கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
 •  உத்தரகண்ட்: ஹல்த்வானியில் சுரங்க வேலை, வேட்டையாடுவது மற்றும் மரங்களை வெட்டுவது போன்ற சட்டவிரோதமான செயல்பாடுகள் காடுகளுக்குள் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க ரோந்து செல்லும் ஸ்மார்ட் ட்ரோன் நேற்று செயல் முறைப்படுத்தப்பட்டது.
 • காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமேதியில் இன்று ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளார். ராகுல் காந்தி, தனது லோக்சபா தொகுதியான அமேதிக்கு 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • கடந்த சில தினங்களுக்கு முன் பெண்களுடன் உல்லாசமாக இருந்த குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சந்தீப் குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சந்தீப் குமார் பிரச்சினை தொடர்பாக, டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
 • ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
 • ராஜஸ்தானி சுரங்க அதிபர் நாராயண் சிங் ரூ.1.11 கோடி மதிப்புள்ள ‘பிரபாத்’ எனப்படும் உயர் ரக குதிரையை வாங்கியுள்ளார். அந்த குதிரைக்கு பிரஞ்சு பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 • யு.எஸ்., ஓபன்: லியாண்டர் பயஸ்-மார்டினா ஹிங்கிஸ் இணை முதல் சுற்றில் வெற்றி
 • யு.எஸ்., ஓபன்: பெண்கள் இரட்டையரில் சானியா மிர்சா-பார்போரா இணை வெற்றி
 • யு.எஸ்., ஓபன்: ஆண்கள் இரட்டையரில் போபண்ணா- பிரடரிக் ஜோடி வெற்றி
 • டி.என்.பி.எல்., கிரிக்கெட்: கோவை அணி வெற்றி
 • திருச்சி: பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 11 பேர் உடல்நலம் பாதிப்பு
 • உ.பி.,யில் கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களை சந்திக்க வருபவர்களுக்கு தரும் சமோசாக்களுக்கு மட்டும் ரூ.8.78 கோடி செலவு செய்ததாக உ.பி., சட்டசபையில் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
 • கேரளாவில் அலுவலக நேரத்தில் ஓணம் கொண்டாட தடை
 • 50 ஆண்டுக்கு பின் அமெரிக்கா-கியூபா இடையே முதன் முறையாக விமான சேவை
 • பாதுகாப்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
 •  பொதுநலன் கருதி அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைய ஆதரவு தரவேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்
 •  வடகொரியாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கூறிய வார்த்தைகளை கேட்டு நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் விவசாய மந்திரி ஹவாங் மின் மற்றும் கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ரி யாங் ஜின் ஆகிய இருவரும் பொது இடத்தில் வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ‘ஜூங் ஆங் இல்போ’ என்ற கொரிய நாளேடு செய்தி வெளியிட்டது.இந்த செய்தி வெளியான சுவடு மறைவதற்குள், கிம் ஜாங் அன்னுக்கு அவமரியாதை தந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் கொல்லப்பட்டார் என்ற தகவலை சியோல் நகரில் தென்கொரிய ஐக்கியப்படுத்துதல் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாங் ஜூன் ஹீ நேற்று தெரிவித்தார்.
 • சென்னை தரமணி டைசல் பயோ பார்க் நிறுவனத்தில் ரூ.20 கோடியில் உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி மையம்: ஜெயலலிதா அறிவிப்பு
 • சூரிய சக்தியால் இயங்கும் 10 குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு மானியம்; விவசாயிகளுக்கு சலுகைகள்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
 • ராயபுரம், ஓடும் பஸ்சில் பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தூவி ரூ.80 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. எல்லை பிரச்சினையை காரணம் காட்டி அந்த பெண்ணிடம் புகாரை வாங்காமல் போலீசார் அலைக்கழித்தனர்.
 • கொளத்தூர் தொகுதியில் சிதலமடைந்துவரும்  குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரவேண்டுமென முக.ஸ்டலின் கேட்டுக் கொண்டார்.
 • கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் கேள்விக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். அப்போது ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

More articles

Latest article