க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று மேலும் ஒரு அமைச்சர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளன.  இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிட உள்ளன.  தவிரத் தனித்த செல்வாக்குடைய சுயேச்சைகளும் போட்டியிட உள்ளனர்.

பாஜகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்னும் ஐயத்தில் உள்ளோர் அக்கட்சியிலிருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைகின்றனர்.  ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியாவில் தொடங்கிப் பல பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

இன்று அகிலேஷ் யாதவ் தலைமையில் நடந்த ஒரு நிகழ்வில் பாஜகவின் மற்றொரு அமைச்சர் தாரா சிங் சவுகான் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.  அவருடன் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும் சமாஜ்வாதியில் இணைந்துள்ளார்.    தாம் அகிலேஷ் யாதவை முதல்வர் ஆக அக்கட்சியில் இணைந்துள்ளதாகத் தாராசிங் தெரிவித்துள்ளார்.