கோவாவில் ஆம் ஆத்மி 13 அறிவிப்புகள் வெளியிட்டு அதிரடி : பாஜக கலக்கம்

Must read

னாஜி

டைபெற உள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலுக்காக 13 அறிவிப்புக்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

வரும் பிப்.14ம் தேதி கோவா மாநிலத்தில் 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவா மக்களுக்கு 13 அம்ச தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

அதன்படி

”கோவாவில் ஆட்சி அமைத்தால் அனைவர்க்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்; பணி இல்லாதோருக்கு  உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும்.  18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,000 வழங்கப்படும். அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் மருத்துவ சேவையை இலவசமாக வழங்கப்படும்.  கோவா ஊழலற்ற மாநிலமாக கோவா மாற்றப்படும். மின்சாரம் மற்ரும் குடிநீர் சேவை அனைவர்க்கும் இலவசமாக வழங்கப்படும்”

என அறிவித்துள்ளார்.

தற்போதைய கோவா மாநில ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கையுடன் உள்ளது.  இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் கவர்ச்சிகர அறிவிப்புகள் மூலம் கோவா தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவுக்கு கடும் போட்டியைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது பாஜகவினருக்கு கலக்கத்தை அளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article