மோட்டார் சைக்கிள் மீது மினி சரக்கு வேன் மோதல்: ஒருவர் பலி

Must read

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தக்காளி பாரம் ஏற்றி வந்த மினிசரக்கு வேன் மோதியதில், வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் மணிகண்டன்.  இவர் ஒடையாண்ட அள்ளி பஸ் நிறுத்தம் அருகே பழைய பொருட்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும்,  தனுஸ்ரீ என்ற மகளும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கடையை வழக்கம் போல் மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். அப்போது அவர் கடையில் இருந்த சிறிது தூரம் சென்றபோது எதிரே ராயக்கோட்டையில் இருந்து ஜித்தாண்டஅள்ளிக்கு தக்காளி பாரம் ஏற்றி சென்ற மினி சரக்கு வேன் ஒன்று பயங்கரமாக வந்து மணிகண்டன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article