சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்பட  4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  பேய்மழை கொட்டியது. கடந்த 17ம் தேதி தொடங்கிய கனமழை தொடர்ந்து 15 மணி நேரம் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழைக்கு, இதுவரை கண்டிராக அளவுக்கு இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின,  இதனால் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, குமரி உள்பட தென் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக நெல்லை மாநகரத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், நெல்லை ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள  ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளதால் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.  அங்கு மீட்புபணிகள்  நடைபெற்று வருகிறது.

இநத் நிலையில், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. வரலாறு காணாத மழையால் பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடுமுறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்துள்ளனர். அதிகாரிகள் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை தொடங்கவும் உத்தரவு அளித்துள்ளது.

வெள்ளம்- கனமழை: தென் மாவட்ட மக்கள் வாட்ஸ் அப், டிவிட்டரில் உதவி கோரலாம்! தமிழக அரசு!