சென்னை: 
.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை – அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை ஓ.பி.எஸ் ஒருநாள் கூட பார்வையிடவில்லை. இப்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,  அமைச்சராகவோ அல்லது முதல்வராகவோ சென்று வந்த தேதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா என்றும் சென்று வந்த தேதியைக் குறிப்பிட்டுச் சொன்னால் அது குறிப்பேட்டில் பதிவாகி இருந்தால் சபாஷ் என்று நானே பாராட்டுகிறேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.