சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது.
இதுகுறித்து வெளியான செய்தியில், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 1, மதுரைக்கு இரண்டு எனத் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் விரைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில்  மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளதால்  மழை தொடரும் என்றும், கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.