சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது, இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், வங்க கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகவுள்ளது. இதனால்,வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தலைமைச்செயலாளர் உள்பட உயர் அதிகாரிகள், 13 மாவட்ட ஆட்சியர்கள், வருவாய், மருத்துவம் , வேளாண், மின்சாரம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் மற்றும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக  கலந்துகொண்டனர்.