சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பேருந்துகளின் பாகங்கள் உடைந்த விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்து களையும் ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி, அதன் பாகங்கள் உடைந்து விழுவதும், பேருந்து ஓட்டுநர் இருக்கை உடைந்து சாலையில் வீசப்பட்ட சம்பவங்களும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக   போக்குவரத்துத்துறை ல் வெளியிடப்பட்ட உத்தரவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  ஆய்வின்போது குறைகள் இருப்பது தெரிய வந்தால், அதை  உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், மேலும் புகார்கள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதுடன், இந்த . ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்துத் துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்