நொளம்பூர் குடிநீர் திட்டம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கினார்

சென்னை:

நொளம்பூர் குடிநீர் திட்டம் உள்பட பல மாவட்ட திட்டங்களை  காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

சென்னை அருகே உள்ள நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள  பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் 18 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள  குடிநீர் திட்டம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும் தேனி, பெரியகுளம், கம்பம் உள்பட பல மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், சமுதாய நலக்கூடம், வகுப்பறை கட்டிடங்கள் உள்பட  189 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து,  பணிக்காலத்தில் காலமான 473 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கும் விதமாக, 16 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Tags: Nolambur drinking water project: The Chief Minister inaugurated through video conferencing, நொளம்பூர் குடிநீர் திட்டம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கினார்