னது இமய மலை பயணம் ஆன்மிக பயணம். இது அரசியல் பயணம் அல்ல. எனவே அரசியல் பேசும் எண்ணம் இல்லை என்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி தெரிவித்தார்.

அதே வேளையில், உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பச்சன் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக கூறி உள்ளார்.

ரஜினியின் இரட்டை வேட பேச்சு தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மிக பயணமாக இமயமைலை சென்ற ரஜினி, சென்னை விமான நிலையத்தில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து சென்றார். இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையில், தேனி மாவட்ட காட்டுத்தீ காரணமாக பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்து எந்தவித இரங்கலும் தெரிவிக்காத ரஜினி,

இமயமலை பயணமாக வட மாநிலம் சென்றுள்ள நிலையில், அங்கு செய்தியாளர்களின் கேள்விக்கு அரசியல் குறித்து பதில் அளிக்க மறுத்த நிலையில், அமிதாப்பச்சன் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக கூறினார்.

தமிழகத்தில் இவ்வளவு பெரிய சோகம் நடைபெற்றுள்ள நிலையில் அதுகுறித்து தனது அனுதாபத்தைக்கூட தெரிவிக்காத ரஜினி, அமிதாப்பச்சனுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் இரட்டை நாக்கு பேச்சு, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.