தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் பதில்

சென்னை:

மலின்  மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், செல்போன் எண்ணுடன் கட்சியில் பதிவு செய்தால் மட்டுமே இ-மெயில் வரும் என்றும்,  கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை, இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ‘கமல் தற்போது அவரின் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார்….  நான் ஒன்று சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள்… மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்து விட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள்.

அந்த இமெயிலில் ‘நான் நாம் ஆனோம். இன்றிலிருந்து எங்கள் கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண் இதுதான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kamal's Makkal Neethi Maiyam answer to BJP Leader Tamilisai questioned