டில்லி:

குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களில் ஜங் புட் எனப்படும் நொறுக்குத்தீனி மற்றும் குளிர்பான விளம்பரங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளதாக இன்று முற்பகல் செய்திகள் வெளியான நிலையில், தற்போது, அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

குழந்தைகளின் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் ஜக்புட் எனப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் குளிர்பான விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வகையில், குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் சேனல்களில் ஒளிரபரப்ப தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பாராளுமன்ற லோக்சபாவில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த, மாநிலங்க ளுக்கான மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்,  தற்போது அப்படியொரு திட்டம் இல்லை என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து மத்திய தகவல்தொடர்பு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும்  அதிகமான கொழுப்பு, உப்பு, காரம்  மற்றும் சர்க்கரையுடன் கூடிய உணவு பொருட்கள் குறித்து விளம்பரப்படுத்த மாட்டோம் என்று 9 முக்கிய உணவு வணிக இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.