வாஷிங்டன்: இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை! இந்திய வம்சாவழி  இதய நோய் நிபுணர் கூறியுள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. இவர், கொரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ளதால், தடுப்பூசி பயன்பாடும் குறைந்துள்ளது. அதேவேளையில், தடுப்பூசிகளால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இந்தியா வந்துள்ள  அசீம் மல்ஹோத்ரா, ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்காவின் பைசர், மாடா்னா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எம்.ஆர்.என்.ஏ. கொரோனா தடுப்பூசிகள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளன. எனவே, அந்த தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் குரல்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே இந்த தடுப்பூசிகள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில்,  எம்.ஆர்.என்.ஏ. மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு,  ஆய்வு முடிவுகள்  வெளியிடப்பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள்   ஏற்படுவதாகவும், குறிப்பாக  பைசர் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை விட, கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், சுமார் 10 சதவீதம் பேருக்கு, பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டன.  சில நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் அந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியவர், அந்தத் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால்,   கோவேக்சின் தடுப்பூசியின் தரவுகளை ஆராய்ந்ததில், அந்தத் தடுப்பூசியால் குறிப்பிடும்படி பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது என்றவர், அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது போலவே தென்படுகிறது. ஆனால், பிற தடுப்பூசிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் நிலையில், கோவேக்ஸினும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியர்களுக்கு இயற்கையாக உருவாகும் நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அது கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே இந்திய மக்கள் கொரோனா குறித்து கவலை அடைய வேண்டாம் என்றவர், இனிமேல் எந்தவொரு இந்தியருக்கும், தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதேபோல பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை என்றார்.