ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இப்போதே தேர்தல் தொடர்பான நடவடிக்கை ளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகரராவின் மகள் ராவ் கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது,  காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என தெரிவித்து உள்ளார். இதுவரை காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வந்த சந்திரசேகர ராவ், இந்த முறை, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளது.

அதே வேளையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் சந்திரசேகரராவ் அரசுக்கு டஃப் கொடுத்து வரும்,  அந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.  ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தின் சந்திரசேகரராவின் 8ஆண்டு கால ஆட்சியில்  8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்து வருகிறார்.

சமீபத்தில்,  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் வெளி மாநில முதல் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் நடைபெற்றது.  இதில் பேசிய சந்திரசேகரராவ்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.

தெலுங்கானா முதல்வரின்  பேச்சை சுட்டிக் காட்டி  ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா, சந்திரசேகரராவை கடுமையாக விமர்சித்து உள்ளார்.   மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பற்றி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியது நல்லது. அதே போல் தெலுங்கானாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற கேள்விக்கும் பதில் தர வேண்டும் அல்லவா? என கூறியவர், கடந்த 8 ஆண்டுகால சந்திரசேகரராவ் ஆட்சியில்   8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை நான கூறவில்லை.   ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த விவசாயிகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? என கேள்வி எழுப்பினார்.

தெலுங்கானாவின் அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், இதுவரை தனித்து போட்டியிட்டு வந்த ராஷ்டிரிய சமிதி கட்சி, கூட்டணி மூலம் தேர்தலை சந்திக்க முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே பாஜக ராவுக்கு எதிரான போக்கை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், மற்றொருபுறம் ஷர்மிளா டஃப் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில்,  காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என முதலமைச்சர்  சந்திரசேகரராவ் மகளும், எம்எல்சியுமான கவிதா செய்தியாளர்களிடம் பேசும்போது,  இந்த நாட்டில் பொது மக்களுக்காக உழைக்கும் ஒரு அரசை கொண்டுவருவதுதான் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல்திட்டம். நாட்டில் வளர்ச்சி ஏற்படாததற்கு பெரும்பாலான பொறுப்பு காங்கிரசையே சேரும். அதற்கு பிறகு பா.ஜ.க.வை சேரும்.

இப்போது பி.ஆர்.எஸ். ஒரு தேசிய கட்சி. இதனால் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியின் ஆதரவையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றவர்,  தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம், அமலாக்க துறை, சிபிஐ,வருமான புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. எனக்கு எதிரான மதுபான முறைகேடு வழக்கும் இதேபோன்றதுதான். நான் இந்திய பிரஜை என்ற முறையில் சிபிஐ விசாரணைக்கு நன்கு ஒத்துழைத்தேன். இதேபோல் அதானியிடம் மத்திய அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை. அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்? ஏனென்றால், மத்திய அரசுக்கு அதானி மிகவும் நெருக்கம் என விமர்சித்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் இரு பெண் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.